சினிமா வசனம் கூறி சட்டப்பேரவையில் நகைச்சுவையாக பதிலளித்த அமைச்சர் துரைமுருகன்.!

0 1249

வாழ்க்கை என்ற திரைப்படத்தில் வரும் 'அந்த காலத்தில் நான்...' என்ற வசனத்தைக்கூறி முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்திற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாக பதிலளித்தததால் பேரவையில் கலகலப்பு ஏற்பட்டது.

கேள்வி நேரத்தின்போது பேசிய தளவாய் சுந்தரம், தான் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது 2001ஆம் ஆண்டில் ஆரோக்கியபுரம் முதல் ஈரோடு வரை கற்கள் போடப்பட்டதாகவும், குமரி மாவட்டத்தில் கல்குவாரி இல்லை என்பதால் தற்போதைய சூழலில் அங்கு கற்கள் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

இதற்கு பதிலளித்த துரைமுருகன், 'அந்த காலத்தில் காலேஜ் படிக்கும் போது' என்ற வசனத்தைப்போல் அந்த காலத்தில் அமைச்சராக இருக்கும் போது என தளவாய் சுந்தரம் பேசுவதாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments