அரியலூரில் பெண் தராத ஆத்திரத்தில் கல்லூரி மாணவியை கடத்த முயன்ற தாய்மாமனை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்.!

0 1224

அரியலூர் அருகே, பெண் தராத ஆத்திரத்தில் கல்லூரி மாணவியை காரில் கடத்த முயன்ற தாய்மாமனை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

குறிஞ்சிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான முத்தையா என்பவர், ரயில் நிலையத்தில் வெல்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது அக்காள் மகளை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்த போது அவரது அக்காள் பெண் கொடுக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த முத்தையா, மாணவி கல்லூரிக்கு சென்றுக் கொண்டிருந்த போது வழிமறித்து வலுக்கட்டாயமாக காரில் ஏற்றியுள்ளார். வெங்கட கிருஷ்ணபுரம் பகுதியில் கார் சென்றபோது மாணவி கத்திக் கூச்சலிட்டதால், சந்தேகமடைந்த பொதுமக்கள் ஒன்று கூடி காரை மடக்கிப் பிடித்து மாணவியை மீட்டனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பெண் தராத ஆத்திரத்தில் மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்ய முயன்றதாக முத்தையா ஒப்புக் கொண்டார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments