கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் சீனாவில் இளைஞர்கள் தின கொண்டாட்டம்!

0 906

சீனாவின் பெய்ஜிங் நகரில் இளைஞர்கள் தின கொண்டாட்டம் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டியது.

1919-ம் ஆண்டு மே மாதம் 4-ம் தேதியன்று, ஏகாதிபத்தியம் மற்றும் நில பிரபுத்துவ முறைக்கு எதிராக இளைஞர்கள் திரண்டெழுந்து போராட்டம் நடத்தி ஜனநாயகத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டதை நினைவுகூறும் வகையில் சீனாவில் ஆண்டு தோறும் மே 4-ம் தேதி இளைஞர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் இளைஞர்கள் அளித்த பங்களிப்பை மையமாக வைத்து நடைபெற்ற மாபெரும் நிகழ்ச்சியில், மே 4 தின பதக்கங்களை வென்றவர்கள், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரின் தீம் பாடலும் பாடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments