5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்படாது - அமைச்சர் சிவசங்கர்!

0 1553

5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்படாது என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை சார்பில் புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். பேருந்துகளில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை, பண பரிவர்த்தனையற்ற பயண சீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் இணையவழியில் இருவழி பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்பவர்களுக்கு 10% கட்டண சலுகை வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பள்ளி வாகனங்களுக்கு முன்புறம், பின்புறம் கேமராவுடன் சென்சார் கருவி பொருத்த பள்ளி வாகன ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் சிவசங்கர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments