இந்தியா - வங்கதேசம் இடையே ஆற்றில் மிதக்கும் எல்லைச்சாவடிகள்.. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடக்கி வைத்தார்..!

0 1115
இந்தியா - வங்கதேசம் இடையே ஆற்றில் மிதக்கும் எல்லைச்சாவடிகள்.. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடக்கி வைத்தார்..!

மேற்கு வங்கத்தில் படகு ஆம்புலன்ஸ் சேவையையும், மிதக்கும் எல்லைச் சாவடிகளையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடக்கி வைத்துள்ளார்.

மேற்குவங்கத்தின் சுந்தரவனக் காடுகளில் இந்திய - வங்கதேச எல்லையில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள ஆற்றில் மிதக்கும் 6 எல்லைச் சாவடிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடக்கி வைத்துடன் அதில் பயணம் செய்து எல்லைப் பகுதிகளைப் பார்வையிட்டார்.

மேற்கு வங்கத்தின் சாகேப் காளி முதல் பீகாரின் சம்சேர் நகர் வரையுள்ள ஆற்றங்கரைப் பகுதிகள் பயனடையும் வகையில் படகு ஆம்புலன்ஸ் சேவையையும் அமித்ஷா கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.

அரிதாஸ்பூர் எல்லைச் சாவடி அருகே மைத்ரி அருங்காட்சியகம் கட்டுவதற்கும் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments