அரசுப் பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்த Google Read Along செயலியுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

0 1323
அரசுப் பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்த Google Read Along செயலியுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

அரசுப் பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்த கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

எளிதாக ஆங்கிலம் கற்கவும், பேசவும் Google Read Along என்ற செயலியை அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்படுத்த ஏதுவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கூகுள் நிறுவனத்துடன் பள்ளிக்கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

இதனை தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை சார்பில் 181 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 208 அரசுப் பள்ளி கட்டிடங்கள், ஆய்வகக் கட்டிடங்கள், கழிவறைகள் ஆகியவற்றையும் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொடர்ந்து, முத்தமிழ் அறிஞர் மொழிப்பெயர்ப்பு திட்டம், இளந்தளிர் இலக்கியம், திசைதோறும் திராவிடம் ஆகிய திட்டங்களின் கீழ் 28 நூல்களையும் முதலமைச்சர் வெளியிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments