உக்ரைனை கைப்பற்றும் ரஷ்யாவின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது - ட்வீட் போட்ட பிரிட்டன்!

உக்ரைனில் ராணுவம் அல்லாத இலக்குகள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில், உக்ரைனை கைப்பற்றும் ரஷ்யாவின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதால் பள்ளிகள், மருத்துவமனைகள், குடியிருப்புகள், போக்குவரத்து மையங்கள் உள்ளிட்ட ராணுவம் அல்லாத இலக்குகளின் மீது ரஷ்ய படைகள் ஏவுகணைகள் மூலம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக கூறியுள்ளது.
கருங்கடலில் இருந்து செல்வதற்கு ஏதுவாக அதனை ஒட்டியிருக்கும் ஒடேசா, கெர்சன், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்கி வருவதாகவும் உக்ரைனின் கடல்வழி போக்குவரத்தை கட்டுப்படுத்தி அந்நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க ரஷ்யா முயற்சிப்பதாகவும் பிரிட்டன் குற்றஞ்சாட்டியுள்ளது.
Comments