சேலம், கரூர், நாமக்கல், தென்காசி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சேலம், கரூர், நாமக்கல், தென்காசி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், குமரி, சேலம், நாமக்கல், தென்காசி, நெல்லை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழையும், எஞ்சிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் பகல் நேர வெப்பநிலை அதிகபட்சமாக இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நாளைய தினம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக் கூடும் என கூறப்பட்டுள்ளது.
Comments