10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் தனுஷ் ஸ்ரீகாந்த் தங்கம் வென்றார்..!

0 6645
10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் தனுஷ் ஸ்ரீகாந்த் தங்கம் வென்றார்..!

பிரேசிலில் நடைபெற்று வரும் செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கான ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் தனுஷ் ஸ்ரீகாந்த் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இறுதிப்போட்டியில் தனுஷ் அதிகபட்சமாக 247.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து முதலிடம் பிடித்தார். இதேபோல் மற்றொரு இந்திய வீரர் சவுரியா சைனி 224.3 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார்.

இதைத்தொடர்ந்து பேட்மிண்டன்  அணிகளுக்கிடையிலான போட்டியில் ஜப்பானை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய பேட்மிண்டன் அணி தங்கம் வென்றுள்ளது. இதன் மூலம் 2 தங்கம், ஒரு வெண்கலத்துடன் இந்தியா பதக்கங்கள் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments