ஜெய்பீம் பட விவகாரத்தில் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் மீது புகார்..!

0 5466
ஜெய்பீம் பட விவகாரத்தில் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் மீது புகார்..!

ஜெய்பீம் படத்தில் சாதி, மத ரீதியான உணர்வை புண்படுத்தி, மோதலை ஏற்படுத்தும் விதமாக காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கொடுக்கப்பட்ட புகாரில், சூர்யா - ஜோதிகா மீது வழக்குப்பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையை வருகிற 20-ந் தேதி தாக்கல் செய்ய சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில், வெளிநாட்டு மதமாற்ற நிறுவனங்கள் கொடுத்த பணத்தை நன்கொடை என்ற பெயரில் பெற்று சூர்யாவின் அகரம் அறக்கட்டளை கையாடல் செய்ததாகவும், ஜெய்பீம் படத்திற்கான விளம்பர செலவாக ஒரு கோடி ரூபாய் என போலி கணக்கு காட்டி, அந்த பணத்தை வெளிநாட்டு கிறிஸ்துவ மதமாற்ற நிறுவனங்களுக்கு கொடுத்து அந்நிய செலவாணி மோசடி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, ஜெய்பீம் பட தயாரிப்பாளர்கள் சூர்யா - ஜோதிகா, இயக்குநர் ஞானவேல், உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வேளச்சேரி போலீசாரிடம் அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments