ஸ்பெயினில் வரலாறு காணாத அளவு கொட்டித் தீர்த்த கனமழை.. ஒரே நாளில் ஒரு ச.மீ 201 லி. மழை பதிவு

ஸ்பெயினில் வரலாறு காணாத அளவு கொட்டித் தீர்த்த கனமழை.. ஒரே நாளில் ஒரு ச.மீ 201 லி. மழை பதிவு
ஸ்பெயினில் வரலாறு காணாத அளவில் பெய்த கனமழை கொட்டித் தீர்த்ததால் முக்கிய நகரங்களில் காட்டாற்று வெள்ளம் போல் மழை நீர் கரை புரண்டு ஓடுகிறது.
மத்திய தரைக்கடலை ஒட்டி அமைந்துள்ள Valencia பிராந்தியத்தில், ஒரே நாளில் ஒரு சதுர மீட்டருக்கு ஏறத்தாழ 201 லி. மழை கொட்டி தீர்த்த நிலையில், மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் சாலைகள், வீடுகள் மற்றும் விளை நிலங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கபாதைகள் மூடப்பட்டு, மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
Comments