மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் மேற்கு வங்கம் பயணம்.. பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்

0 765
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் மேற்கு வங்கம் பயணம்.. பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக மேற்கு வங்க மாநிலத்திற்கு இன்று செல்கிறார்.

2021 சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிற்கு முதல் முறையாக மேற்கு வங்கத்திற்கு அமித் ஷா செல்கிறார். இந்தியா - வங்காள தேச எல்லைப் பகுதிகளை பார்வையிடும் அமித் ஷா, பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். தொடர்ந்து மத்திய கலாசார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலை நிகழ்வில் கலந்து கொள்கிறார்.

போட் ஆம்புலன்ஸ் வசதியை கொடியசைத்து துவக்கி வைக்கிறார். தொடர்ந்து கொல்கத்தா செல்லும் அமித்ஷா, வெள்ளிக்கிழமை மேற்கு வங்க மாநில பா.ஜ.க. தலைவர்களை சந்திக்கிறார். எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்டோரையும் அமித் ஷா சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments