’”காதல் அழிவதில்லை’’.. போரில் கண்ணிவெடியால் இரண்டு கால்களை இழந்த காதலி.. மருத்துவமனையிலேயே திருமணம் செய்து கொண்ட காதலன்..!

0 2245

உக்ரைனில் போரில் இரண்டு கால்களையும் இழந்த காதலியை மருத்துவமனையில் வைத்து திருமணம் செய்து கொண்ட காதலன், அவரை குழந்தையை போல் தூக்கி வைத்துக் கொண்டு நடனமாடிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

லூஹான்ஸ்க் பகுதியைச் சேர்ந்த செவிலியரான ஒக்ஸானா (Oksana) தனது காதலன் விக்டருடன் நடந்து சென்று கொண்டிருந்த போது, கண்ணிவெடியில் கால் வைத்ததால் தனது இரண்டு கால்களையும் இழந்ததோடு, இடது கையில் நான்கு விரல்களையும் பறிகொடுத்தார். லிவிவ் நகரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒக்ஸானா ஓரளவுக்கு உடல்நலம் தேறியதை அடுத்து, அவரது காதலன் விக்டர் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மையத்தில் வைத்தே ஒக்ஸானாவை திருமணம் செய்து கொண்டார்.

மோதிரம் மாற்றி காதலியை மணந்து கொண்ட விக்டர், முத்தமிட்டு அன்பை பரிமாறிக் கொண்டதோடு, குழந்தையை போல் காதலியை கையில் தூக்கி வைத்துக் கொண்டு நடனமாடினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments