விசாரணை கைதி தங்கமணி உயிரிழந்த விவகாரம்.. கிளைச்சிறையில் வலிப்பு ஏற்பட்டு, உயிரிழந்ததாக முதலமைச்சர் விளக்கம்

0 1833
விசாரணை கைதி தங்கமணி உயிரிழந்த விவகாரம்.. கிளைச்சிறையில் வலிப்பு ஏற்பட்டு, உயிரிழந்ததாக முதலமைச்சர் விளக்கம்

திருவண்ணாமலையில் விசாரணை கைதி உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் அறிக்கையின் படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விளக்கமளித்த அவர், விசாரணை கைதி தங்கமணி, முதற்கட்ட விசாரணைக்கு பிறகு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டதாகவும், பின்னர், வலிப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.

இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, நியாயமான முறையில் விசாரணை நடைபெறுகிறது எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments