சேலத்தில் பெய்த கனமழையால் பழைய கட்டிடத்தின் பால்கனி சுவர் சரிந்து விபத்து.. 3 பேர் படுகாயம்

0 1418

சேலத்தில் பெய்த கனமழையால், சிதிலமடைந்திருந்த மாடி வீட்டின் பால்கனி சுற்றுசுவர் சரிந்து விழுந்த விபத்தில், முதியவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

சந்தைப்பேட்டை பகுதியில் ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான சுமார் 50 ஆண்டுகள் பழமையான மாடி வீடு, சிதிலமடைந்து இருந்ததால் அவர் தனது குடும்பத்தினருடன் வேறு இடத்தில் வசித்து வருகிறார்.

நேற்றிரவு சேலத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையால், ஏற்கனவே உறுதித் தன்மையை இழந்திருந்த அந்த கட்டிடத்தின் மாடி சுற்றுச்சுவர் திடீரென சரிந்து விழுந்தது.

இதில் கட்டிடத்திற்கு கீழ் நின்று பேசிக் கொண்டிருந்த சுப்பிரமணி, விஸ்வநாதன் மற்றும் ஹரிஹரன் ஆகியோர் மீது உடைந்த சுவரின் பாகங்கள் விழுந்தன. மூவரும் படுகாயமடைந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments