பட்டப்பகலில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு.. மர்ம நபர்கள் செயினை பறித்துச் சென்ற சிசிடிவி காட்சி..!

0 1278
பட்டப்பகலில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு.. மர்ம நபர்கள் செயினை பறித்துச் சென்ற சிசிடிவி காட்சி..!

காஞ்சிபுரம் மாவட்டம் மாடம்பாக்கம் அருகே, சாலையில் நடந்துச் சென்ற மூதாட்டியிடம் பட்டப்பகலில் மர்ம நபர்கள் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

மாணிக்கம் நகரைச் சேர்ந்த உஷா என்ற மூதாட்டி, சூப்பர் மார்க்கெட்டில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து பைக்கில் சென்ற மர்ம நபர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை சவரன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

செயினை அறுத்த வேகத்தில், மூதாட்டி நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் மூதாட்டி லேசான காயமடைந்த நிலையில், சம்பவம் குறித்து சேலையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments