கேரளாவில் நள்ளிரவில் அரசுப் பேருந்தில் ஏறி ரகளை செய்த இளம் பெண்கள்.. காவல் நிலையத்தில் போலீசாருடனும் ஆபாச வாக்குவாதம்

0 2755
கேரளாவில் நள்ளிரவில் அரசுப் பேருந்தில் ஏறி ரகளை செய்த இளம் பெண்கள்.. காவல் நிலையத்தில் போலீசாருடனும் ஆபாச வாக்குவாதம்

கேரளாவில் நள்ளிரவில் அரசுப் பேருந்தில் ஏறிய 3 இளம்பெண்கள், இருக்கைகள் காலியாக இல்லை என்று கூறி ரகளையில் ஈடுபட்ட நிலையில், காவல் நிலையம் அழைத்துச் சென்றபோது, போலீசாரையும் ஆபாசமாகப் பேசி அடிக்கப் பாய்ந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

எர்ணாகுளத்தில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் நள்ளிரவு ஒரு மணியளவில் கல்லம்பலம் என்ற ஊரில் 3 இளம்பெண்களும் ஒரு இளைஞரும் ஏறியுள்ளனர். பேருந்தில் ஏறியதில் இருந்தே இருக்கைகள் இல்லை எனக் கூறி, அவர்கள் தகராறில் ஈடுபட்டதாகவும் பயணிகளை ஆபாசமாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து பேருந்து நேராகக் காவல் நிலையம் சென்றுள்ளது.

அங்கு சென்றும் கோபம் அடங்காத இளம்பெண்கள், பயணிகளை ஆபாசமாகப் பேசியதுடன் தட்டிக்கேட்ட போலீசாரையும் ஆபாசமாகப் பேசியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஒரு காவலர் அப்பெண்களில் ஒருவரை அடிக்கப் போக, பதிலுக்கு அந்தப் பெண்ணும் காவலரை அடிக்கப் பாய, காவல் நிலையம் களேபரமானது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments