இரவு விடுதி பார்ட்டியில் ராகுல் காந்தி அருகில் நின்ற பெண் யார்? சமூகவலைதளவாசிகள் கேள்வி.!

0 3221
இரவு விடுதி பார்ட்டியில் ராகுல் காந்தி அருகில் நின்ற பெண் யார்? சமூகவலைதளவாசிகள் கேள்வி.!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, நேபாளத்தில் இரவு விடுதியின் பார்ட்டி ஒன்றில் பங்கேற்றது போல் வீடியோ வெளியான நிலையில், அவருக்கு அருகில் நின்ற பெண் யார்? உள்ளிட்ட பல கேள்விகளை சமூகவலைதளவாசிகள் எழுப்பியுள்ளனர்.

நண்பரின் திருமணத்தில் பங்கேற்க காத்மண்டு சென்ற ராகுல் காந்தி, நைட்கிளப்பில் இருப்பது போன்ற காணொலி சமூகவலைதளங்களில் பரவியதால், அவர் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பல்வேறு பிரச்சனைகள் உள்ள நிலையிலும், அவர் பார்ட்டியில் தனது நேரத்தை செலவிட்டு வருவதாக சமூகவலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்தனர்.

குறிப்பாக வீடியோவில், தனக்கு அருகே நின்ற பெண்ணுடன் ராகுல் பேசுவது போல் காட்சிகள் இடம்பெற்ற நிலையில், அவர் தொடர்பாக நெட்டிசன்கள் பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளனர். அவர் பார்ப்பதற்கு, 2018ஆம் ஆண்டு முதல் காத்மண்டுவில் பணியாற்றும் நேபாளத்திற்கான சீன தூதரான ஹூ யாங்கி போல் உள்ளதாகவும் பலர் குறிப்பிட்டனர். எனினும், இதனை சமூகவலைதளத்தில் சிலர் மறுத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments