புதுச்சேரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றிருந்தவர் மீது மோதி விபத்து

0 1397
புதுச்சேரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றிருந்தவர் மீது மோதி விபத்து

புதுச்சேரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையோரத்தில் இருசக்கர வாகனத்துடன் நின்றவர் மீது மோதிவிட்டு, விவசாய நிலத்துக்குள் இறங்கியது.

கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே புதுச்சேரி சாலையில், ஒருவர் சாலையோரத்தில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது மலட்டாறு பாலம் வழியே வேகமாக வந்த கார், பள்ளம் ஒன்றில் ஏறி இறங்கியதால் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்றவர் மீது மோதி தூக்கிவீசிவிட்டு, விவசாய நிலத்துக்குள் இறங்கியது.

இந்த சம்பவத்தில், இருசக்கர வாகனத்துடன் நின்றவர் காயமடைந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments