கரும்பு ஏற்றி வந்த டிராக்டரின் டயர் வெடித்து விபத்து.. டயர் வெடித்ததில் சாலையில் கவிழ்ந்த டிராக்டர்

0 1153
கரும்பு ஏற்றி வந்த டிராக்டரின் டயர் வெடித்து விபத்து.. டயர் வெடித்ததில் சாலையில் கவிழ்ந்த டிராக்டர்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் கரும்பு ஏற்றி வந்த டிராக்டர், டயர் வெடித்ததில் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவிக்காட்சி வெளியாகியுள்ளது. 

சோகத்தூர் கிராமத்தில் வரதன் என்பவரின் விவசாய நிலத்தில் இருந்து செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை ஏற்றிச் சென்ற டிராக்டர், வந்தவாசி ஐந்துகண் பாலம் அருகே வளைவில் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக அதன் டயர் வெடித்தது.

அதில், நிலைதடுமாறிய டிராக்டர் சாலையில் கவிழ்ந்தது. அச்சமயத்தில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கவிழ்ந்து கிடந்த டிராக்டரை வந்தவாசி போலீசார் அப்புறப்படுத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments