ராகுல்காந்தி கேளிக்கை விருந்தில் பங்கேற்றதாக பரவிய காட்சி.. நண்பர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றதாக காங். பொதுச்செயலாளர் தகவல்

0 1741
ராகுல்காந்தி கேளிக்கை விருந்தில் பங்கேற்றதாக பரவிய காட்சி.. நண்பர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றதாக காங். பொதுச்செயலாளர் தகவல்

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, நேபாளத்தில் கேளிக்கை விருந்தில் ஒன்றில் பங்கேற்றது போல் வீடியோ வெளியான நிலையில், அவர் நண்பரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றதாக காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.

பா.ஜ.க. சமூக வலைதள பிரிவுத்தலைவரான அமித் மால்வியா தனது டிவிட்டர் கணக்கில், ராகுல் காந்தியின் வீடியோவை பதிவிட்டு, காங்கிரஸ் கட்சி சிதறிக் கொண்டிருக்கும் நேரத்தில், ராகுல் கேளிக்கை விடுதியில் உள்ளதாக கூறியிருந்தார்.

இதுகுறித்து விளக்கமளித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, நண்பர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் ராகுல்காந்தி பங்கேற்றதாகவும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் திருமண நிகழ்வில் கலந்துகொள்வது குற்றமாகாது என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments