ஃப்ரூட் மிக்ஸ் எனப்படும் பழக்கலவைச் சாறை அருந்திய பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி

0 1299
ஃப்ரூட் மிக்ஸ் எனப்படும் பழக்கலவைச் சாறை அருந்திய பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே விவசாயப் பணியின்போது குளிர்பானம் வாங்கி அருந்திய பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மலையம்பட்டு கிராமத்தில் வயல் ஒன்றில் 24 பெண்கள் நேற்று நெல் நடவுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். களம்பூரிலுள்ள குளிர்பானக் கடையில் இருந்து அவர்களுக்கு ஃப்ரூட் மிக்ஸ் எனப்படும் பழக்கலவைச் சாறு வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.

அதனை அருந்திய நிலையில் இன்று காலை அவர்களில் 18 பேருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த 18 பேரில் 9 வயது சிறுவன் ஒருவனும் 13 வயது சிறுமி ஒருவரும் அடங்குவர்.

பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குளிர்பானக் கடை உரிமையாளரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments