விசாரணை கைதிகளை இரவு நேரத்தில் காவல் நிலையத்தில் வைக்கக் கூடாது ; டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு

விசாரணை கைதிகளை இரவு நேரத்தில் காவல் நிலையத்தில் வைக்கக் கூடாது ; டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு
விசாரணை கைதிகளை இரவு நேரத்தில் காவல் நிலையங்களில் வைத்திருக்கக் கூடாது என காவல் துறையினருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, திருவண்ணாமலையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள் உயிரிழந்த வழக்குகளை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த நிலையில், இனி வரும் நாட்களில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்களை மாலை 6 மணிக்கு மேல் காவல் நிலையத்தில் வைத்திருக்கக் கூடாது எனவும் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும், இந்த நடவடிக்கைகளை கண்காணிக்க உளவுப் பிரிவு காவலர்கள் அந்தந்த காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments