போர்ட் ஸ்டாக்டன் நகரத்தின் வழியாக சுழன்றடித்து கடந்து சென்ற சூறாவளி

0 698
போர்ட் ஸ்டாக்டன் நகரத்தின் வழியாக சுழன்றடித்து கடந்து சென்ற சூறாவளி

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள போர்ட் ஸ்டாக்டன் நகரத்தின் வழியாக கடந்த 1-ம் தேதி மாபெரும் சூறாவளிக்காற்று சுழன்றடித்து கடந்து சென்ற காட்சிகளை உள்ளூர் வாசி ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

அந்த சூறவாளிக்காற்று ஏராளமான நகரும் வீடுகளை சேதப்படுத்தியதுடன், டிரக்குகளை சாய்த்ததாகவும், எனினும் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் நகர காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் காற்று தென்மேற்கு மற்றும் மேற்கு டெக்ஸாஸ் பகுதிகளிலும், நியூ மெக்சிகோவிலும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments