மது குடிக்க ரூ.50 தராததால் மனைவியை கணவன் கொலை செய்த வழக்கு.. ஆயுள் தண்டனையை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

0 1012
மது குடிக்க ரூ.50 தராததால் மனைவியை கணவன் கொலை செய்த வழக்கு.. ஆயுள் தண்டனையை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

மது குடிக்க 50 ரூபாய் கொடுக்காத மனைவியை கொலை செய்த கணவருக்கு விதிக்கபட்ட ஆயுள் தண்டனையை உறுதிசெய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை முருகன்பதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவர், குடிப்பழக்கத்தின் காரணமாக மனைவியுடன் தகராறு செய்து வந்த நிலையில், 2009ஆம் ஆண்டில் குடிக்க பணம் தராததாக கூறி அவரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

இந்த வழக்கில் முத்துசாமிக்கு கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்த நிலையில், அதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார்.

அதன் விசாரணையில், தாயுடன் தந்தை அடிக்கடி தகராறில் ஈடுபடுவார் என அவர்களது பிள்ளைகள் சாட்சி அளித்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், முத்துசாமியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments