44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 4 அணிகளாகக் களமிறங்கும் இந்திய வீரர்கள்.. 4 அணிகளுக்கும் 4 கிராண்ட் மாஸ்டர்கள் பயிற்சியாளர்களாக நியமனம்

0 745
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 4 அணிகளாகக் களமிறங்கும் இந்திய வீரர்கள்.. 4 அணிகளுக்கும் 4 கிராண்ட் மாஸ்டர்கள் பயிற்சியாளர்களாக நியமனம்

இந்தியா சார்பில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்குபெறும் 4 அணிகளுக்கும் 4 கிராண்ட் மாஸ்டர்கள் பயிற்சியாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28ஆம் தேதி மாமல்லபுரத்தில் தொடங்குகிறது. கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தலைமையில் நான்கு அணிகளாக 20 வீரர்கள் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த 4 அணிகளுக்கும் தனித்தனியாக பயிற்சியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  கிராண்ட் மாஸ்டர்கள் ஸ்ரீநாத் நாராயணன், ரமேஷ், அபிஜித் ,சுவப்னில் தோபடே ஆகிய நான்கு  பேரும் ஒவ்வொரு அணிக்கும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments