ஏசியின் அவுட்டோர் யூனிட் வெடித்து விபத்து ; இளைஞர் படுகாயம்

0 2063
ஏசியின் அவுட்டோர் யூனிட் வெடித்து விபத்து ; இளைஞர் படுகாயம்

செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டி அருகே ஏசியின் அவுட்டோர் யூனிட் வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.

பகத்சிங் நகர் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர் தனது வீட்டில் மெஸ் ஒன்றை நடத்தி வரும் நிலையில், அங்கு பணிபுரியும் வட மாநில இளைஞர் ராம்குமார், வழக்கம் போல் நேற்றிரவு வீட்டு மாடியில் தூங்கச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த ஏசியின் அவுட்டோர் யூனிட்-ல் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியதாக கூறப்படும் நிலையில், இதனை கண்ட ராம்குமார் அருகே சென்று பார்த்தபோது அது திடீரென வெடித்தது.

இதில் ராம்குமாரின் கை, கால்கள், முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மின்கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக மறைமலைநகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments