வெப்ப அலையின் தாக்கத்தால் பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றியமைத்து மாநில அரசுகள் உத்தரவு

0 6963

நாட்டில் நிலவும் வெப்ப அலையின் தாக்கத்தால் பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றியமைத்து, சில மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன.

ஹரியானா மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை வகுப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வருகிறது.

இதே போல், ஒடிசாவிலும் காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலையால் பல்வேறு வட மாநிலங்களுக்கு மஞ்சள்நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments