பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு கடத்திய ரூ.280 கோடி ஹெராயின் சிக்கியது.. 9 பேர் கைது..!

0 881

பாகிஸ்தானில் இருந்து ஹெராயின் கடத்தி வந்த 9 பேரை கைது செய்த அதிகாரிகள் 280 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை கைப்பற்றினர்.

குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் இந்திய கடலோர காவல் படை கூட்டாக நடத்திய சோதனையில் போதைப் பொருள் சிக்கியது. சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், அல் ஹஜ் என பெயரிட்டிருந்த படகை சோதனை செய்தனர்.

அதில் 56 கிலோ எடையுள்ள 280 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் சிக்கியது. ஹெராயின் கடத்தலில் ஈட்பட்ட 9 பாகிஸ்தானியர்களை கைது செய்த அதிகாரிகள் படகை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments