நைஜீரியாவில் 3 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து : 8 பேர் உயிரிழப்பு

0 1085

நைஜீரியாவில் 3 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென்மேற்கு மாகாணமான லாகோஸில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் கட்டிடம் இடிந்து நொறுங்கி உள்ளது. கட்டிட இடிபாடுகளுக்குள் வேறு யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என மீட்புப்படையினர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

விதிமுறைகளை பின்பற்றாமலும் கட்டிடங்கள் கட்டப்படுவதாலும், பழைய கட்டிடங்கள் என்பதாலும் அடிக்கடி அவை இடிந்து விழும் சம்பவங்கள் நடப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments