ஏடிஎம் மையத்தில் பணம் செலுத்த வந்தவருக்கு உதவி செய்வது போல நாடகமாடி நூதன திருட்டில் ஈடுபட்ட நபருக்கு வலைவீச்சு

0 1835
ஏடிஎம் மையத்தில் பணம் செலுத்த வந்தவருக்கு உதவி செய்வது போல நாடகமாடி நூதன திருட்டில் ஈடுபட்ட நபருக்கு வலைவீச்சு

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில், ஏடிஎம் மையத்தில் பணம் செலுத்த வந்தவருக்கு உதவி செய்வது போல நாடகமாடி, அவர் கொடுத்த பணத்தை தனது கணக்கில் செலுத்தி ஏமாற்றிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த மாதம் 7- ஆம் தேதி சீரியம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்ற விவசாயி தனது கணக்கில் வரவு வைக்க, 14 ஆயிரத்து 500 ரூபாயுடன் பாலக்கோடு ஸ்டேட் பேங்க் ஏடிஎம் மையத்துக்குச் சென்றுள்ளார்.

பணம் செலுத்தும் இயந்திரத்தை இயக்கத் தெரியாததால், அருகில் இருந்த நபரிடம் உதவி கேட்டு தனது ஏடிஎம் அட்டையைக் கொடுத்துள்ளார். அந்த நபர் கோவிந்தராஜுவின் கவனத்தை திசை திருப்பி, அவரது ஏடிஎம் அட்டைக்குப் பதிலாக தனது ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி, பணத்தை தனது கணக்குக்கு வரவு வைத்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது.

பல மணி நேரம் ஆகியும் பணம் செலுத்தியது தொடர்பான குறுஞ்செய்தி வராததால், வங்கிக்குச் சென்று விசாரித்துள்ளார் கோவிந்தராஜ். அப்போதுதான் தாம் ஏமாற்றப்பட்டது அவருக்குத் தெரியவந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments