பேருந்தை முந்த முயன்று கீழே விழுந்த இருசக்கர வாகனம் : கணவர் கண்முன்னே பேருந்து சக்கரத்தில் சிக்கி தலைநசுங்கி மனைவி பலி

0 13305

துரையில் அரசுப் பேருந்தை இடதுபுறமாக முந்த முயன்ற இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி, கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்தார். மதுரை பெருங்குடியைச் சேர்ந்தவர்கள் சுரேஷ்-தனமாலினி தம்பதி.

காலை கணவனும் மனைவியும் தங்களது ஸ்கூட்டரில் பெரியார் பேருந்து நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். வில்லாபுரம் வெற்றி திரையரங்கம் அருகே முன்னால் சென்ற அரசுப் பேருந்தை இடதுபுறமாக முந்த முயன்றுள்ளார் சுரேஷ்.

பேருந்தை முந்த வேண்டும் என அவர் சற்று வேகமாகச் சென்ற நிலையில், முன்னால் சைக்கிளில் மெதுவாகச் சென்றவர் மீது மோதாமல் தவிர்க்க பிரேக்கை அழுத்தி இருக்கிறார்.

இதில் ஸ்கூட்டர் நிலை தடுமாறி தனமாலினி கீழே விழுந்தார். அப்போது அவரது தலையில் பேருந்தின் பின்பக்கச் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் கணவன் கண்முன்னே அவர் பரிதாபமாக பலியானார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments