இரண்டு மகன்கள் தற்கொலை... விரக்தியில் பெற்றோரும் உயிரை மாய்த்த சோகம்

0 2274

ராணிப்பேட்டையில் மனைவியுடனான தகராறில் தற்கொலை செய்து கொண்ட மகனின் இழப்பை தாளாமல் மனமுடைந்து தாயும், தந்தையும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பன்னீர்செல்வம் - குணசுந்தரி தம்பதிக்கு விக்னேஷ், ரமேஷ் என இரண்டு மகன்கள் இருந்தனர். 4 ஆண்டுகளுக்கு முன் விக்னேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், ரமேஷுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன் விபத்து ஒன்றில் ரமேஷுக்கு தலையில் அடிபட்டு புத்தி சுவாதினம் இல்லாமல் மாறிய நிலையில், அதற்காக பாகாயம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

இதனால், குடும்பத்திற்குள் அடிக்கடி சண்டை, சச்சரவு ஏற்பட்டு வந்த நிலையில், சம்பவத்தன்று ரமேஷின் மனைவி காயத்ரி கோபித்துக் கொண்டு குழந்தையோடு தாய் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்த ரமேஷ் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதனை பார்த்த பன்னீர்செல்வம், குணசுந்தரியும் இருந்த ஒரு மகனும் தற்கொலை செய்த விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments