மணிலாவில் குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து.. 8 பேர் பலி.. 80 வீடுகள் தீயில் கருகி நாசம்

0 1580
மணிலாவில் குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து.. 8 பேர் பலி.. 80 வீடுகள் தீயில் கருகி நாசம்

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் குடியிருப்புப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

மேலும் தீப்பிடித்த தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறிய போது சிலர் படுகாயம் அடைந்தனர். உள்ளூர் நேரப்படி அதிகாலை 5 மணியளவில் இந்த தீ விபத்தில் 80 வீடுகள் வரை எரிந்து நாசமாகியுள்ளன. தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.

கியூசான் நகரின் புறநகர் பகுதியில் உள்ள பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தின் பரந்த வளாகத்திற்குள் நெரிசலான குடியிருப்புகள் அடங்கிய அந்த பகுதியில் முதலில் எங்கிருந்து தீப்பிடித்து பரவத்தொடங்கியது, எப்படி தீ விபத்து ஏற்பட்டது உள்ளிட்ட விரிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments