காணாமல் போன அன்பிற்குரியவர்களை தேடி அகதிகள் ஊர்வலம்.. தங்கள் குடும்ப உறுப்பினர்களை கண்டுபிடித்து தர கோரிக்கை

0 1423
காணாமல் போன அன்பிற்குரியவர்களை தேடி அகதிகள் ஊர்வலம்.. தங்கள் குடும்ப உறுப்பினர்களை கண்டுபிடித்து தர கோரிக்கை

மெக்சிகோவில் காணமால் போன தங்கள் குடும்ப உறுப்பினர்களை தேடி சியுடட் ஹிடல்கோ மற்றும் சியாபாஸ் நகரங்களில் ஏராளமான அகதிகள் ஊர்வலமாக சென்றனர்.

காணாமல் போன தங்கள் அன்பிற்குரியவர்களின் புகைப்படங்களையும், பேனர்கள் மற்றும் கொடிகளை ஏந்தியவாறும் அவர்கள் தலைநகர் மெக்சிகோ சிட்டியை நோக்கி சென்றனர்.

அதில் அனிதா ஜெலயா என்ற ஒரு பெண் அமெரிக்காவை நோக்கி சென்ற போது மாயமான தனது மகனை கண்டுபிடிப்பதற்கு எத்தகைய சிரமத்தையும் எதிர்கொள்வேன் என தெரிவித்தார்.

மெக்சிகோவில்  நிலவும் பொருளாதார சீர்கேடு காரணமாக ஆண்டுதோறும் அங்கிருந்து அமெரிக்காவுக்கு தப்பிச்செல்ல முயலும் அகதிகளில் ஆயிரக்கணக்கானோர் மாயமாவது வழக்கம். அது குறித்து அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்துவதில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments