திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து ரக நூல் விலை கிலோவிற்கு ரூ.40 வரை உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து ரக நூல் விலை கிலோவிற்கு ரூ.40 வரை உயர்வு
திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு மாதத்திற்கான நூல் விலை கிலோவிற்கு 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில் பஞ்சு விலைக்கு ஏற்ப நூல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் நூல் விலை 30 ரூபாய் வரை உயர்ந்த நிலையில் தற்போது நடப்பு மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் வெளியிட்டுள்ளன. அதில் அனைத்து ரக நூல் விலை கிலோவுக்கு ரூ.40 உயர்த்தப்பட்டு ஒரு கிலோ 20-வது நம்பர் கோம்டு நூல் 400 ரூபாய்க்கும், 24-ம் நம்பர் நூல் 415 ரூபாய்க்கும், 40-ம் நம்பர் நூல் 465 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜவுளி, நூல் உற்பத்தி தொழில்துறையினர் கவலையடைந்துள்ளனர்.
Comments