சீனாவில் 6 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்புப் பணி தீவிரம்

0 1102
சீனாவில் 6 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்புப் பணி தீவிரம்

மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், அங்கு மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

சாங்ஷா நகரில் உள்ள 6 மாடி குடியிருப்பு கட்டிடம் கடந்த 29-ஆம் தேதி மதியம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 39 பேர் மாயமான நிலையில், 16 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர் மீட்புப் பணியில், ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவசரகால மீட்புப் பணியாளர்கள் குடியிருப்பின் ஒவ்வொரு அடுக்கிலும் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.

சிறிய அளவிலான கருவிகளை பயன்படுத்தி இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களுக்கு தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை  தீயணைப்பு வீரர்கள் வழங்கி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments