இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் ராமேஸ்வரம் வருகை.. தமிழகம் வரும் அகதிகளின் எண்ணிக்கை 80ஆக அதிகரிப்பு

0 1312
இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் ராமேஸ்வரம் வருகை.. தமிழகம் வரும் அகதிகளின் எண்ணிக்கை 80ஆக அதிகரிப்பு

இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கைக்குழந்தை உள்பட 5 பேர் வந்துள்ளனர்.

வவுனியா மாவட்டம் சிதம்பரபுரம் பகுதியில் வசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த அவர்கள் பைபர் படகில் புறப்பட்டு சேராங்கோட்டை கடற்கரையில் தரை இறங்கினர்.

 தகவல் அறிந்து அங்கு சென்ற ராமேஸ்வரம் மரைன் போலீசார் அவர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் இலங்கையில் ஒரு கிலோ பால் மாவு 2ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதால் 2 மாத கைக் குழந்தைக்கு உணவு கொடுக்க முடியாமல் தவிப்பதாக அதன் தாய் லதா தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments