அமெரிக்காவின் சிகாகோ உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் உயிரிழந்த நிலையில், 42 பேர் காயம்

0 2404
அமெரிக்காவின் சிகாகோ உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் உயிரிழந்த நிலையில், 42 பேர் காயம்

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 42 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் துப்பாக்கிசூடு வன்முறை பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் ஆங்காங்கே துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் வழக்கமான நிகழ்வுகளாக மாறியுள்ளன.

இந்நிலையில் சிகாகோ நகரின் தெற்கு Kilpatrick பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 69 வயது முதியவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதேபோல், Brighton Park, South Indiana, North Kedzie Avenue, Humboldt Park உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 42 பேர் காயமடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments