சென்னையில், வட இந்தியர்களை சுற்றுலாவிற்கு அழைத்து செல்வதாகக் கூறி கார் டிக்கியில் மறைத்து கடத்தி வரப்பட்ட போதை பொருளை பறிமுதல் செய்த போலீசார்.!

0 2465

சென்னையில், வட இந்தியர்களை சுற்றுலாவிற்கு அழைத்து செல்வதாகக் கூறி கார் டிக்கியில் மறைத்து கடத்தி வரப்பட்ட 3.2 கிலோ ஹெராயின் போதை பொருளை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வடமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு போதை பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக வந்த காரினை மடக்கி சோதனையிட்டனர்.

விசாரணையில் ராஜஸ்தானிலிருந்து ஹெராயினை தமிழகம் கொண்டு வந்து மண்டபம் வழியாக இலங்கைக்கு கொண்டு செல்வது தெரியவந்தது. இதுதொடர்பாக, தமிழகத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ரமேஷ்ராவ் ஆகியோர் கைதான நிலையில், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments