செம்பியம் பகுதியில் துணிக்கடையில் கத்தி முனையில் கொள்ளை.. திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது

0 1496
செம்பியம் பகுதியில் துணிக்கடையில் கத்தி முனையில் கொள்ளை.. திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது

சென்னை செம்பியம் அருகே துணிக்கடையில் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி, துணிகளை திருடிச் சென்ற 4 இளைஞர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர் கென்னடி சதுக்கம் பகுதியைச் சேர்ந்த ஜாவித் என்பவர், எம்.பி.எம் பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது கடைக்கு வந்த 3 பேர், கத்தியைக் காட்டி மிரட்டி துணிகள் மற்றும் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

ஜாவித் பணம் தர மறுத்த நிலையில், கத்தியால் தாக்கிவிட்டு துணிகளை எடுத்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். ஜாவித் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்ட போலீசார், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கலை, செல்வகுமார் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments