மளிகைக் கடை ஷட்டரை உடைத்து உணவுப் பொருட்களை சாப்பிட்ட யானைகள்.. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து யானைகளை விரட்டினர்

0 1753
மளிகைக் கடை ஷட்டரை உடைத்து உணவுப் பொருட்களை சாப்பிட்ட யானைகள்.. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து யானைகளை விரட்டினர்

கோவை மாவட்டம் தடாகம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் மளிகை கடையின் ஷட்டரை உடைத்து உணவு பொருட்களை சாப்பிட்ட வீடியோ வெளியாகி உள்ளது.

பெரிய தடாகம் வனப்பகுதியிலிருந்து  வெளியேறிய 7 காட்டுயானைகள், உணவு மற்றும் தண்ணீர் தேடி அதிகாலை தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உலா வந்தன.

அதில் 3 யானைகள் அங்கிருந்த  மளிகைக்கடை ஒன்றின் ஷட்டரை உடைத்து உள்ளே இருந்த அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை சாப்பிட்டுள்ளன. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை ஊழியர்கள் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments