உணவு திருவிழாவில் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர்... ஒருவர் பலி - 5 பேர் காயம்

0 1351

அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் நடைபெற்ற உணவு திருவிழாவில் புகுந்த மர்மநபர் ஒருவன் சுற்றியிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 5 பேர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ஜாக்சன் நகரில் ஆண்டுதோறும் மட்பக் என்ற பெயரில் நடைபெறும் உணவு திருவிழாவில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், சமையல் போட்டிகள் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இந்நிலையில், இந்த ஆண்டிற்கான திருவிழாவின் போது, புகுந்த புகுந்த மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments