பேக்கரி கடை உரிமையாளரை தாக்கி கடையை சூறையாடிய கும்பல்.. சிசிடிவி உதவியுடன் கும்பலை பிடிக்கும் பணி தீவிரம்
பேக்கரி கடை உரிமையாளரை தாக்கி கடையை சூறையாடிய கும்பல்.. சிசிடிவி உதவியுடன் கும்பலை பிடிக்கும் பணி தீவிரம்
புதுச்சேரியில் பேக்கரி கடை உரிமையாளரை தாக்கி, கடையை சூறையாடிய கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கொம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜீவன் என்பவர் அப்பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரின் ஆதரவாளர்கள் கடைக்கு வந்து, ஓசியில் கேக் மற்றும் பேக்கரி பொருட்கள் கேட்டு உள்ளனர்.
இதற்கு ராஜீவன் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் ராஜீவனை சரமாரியாக தாக்கி, கடையில் இருந்து பேக்கரி பொருட்களையும் சூறையாடியது. இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments