மாமல்லபுரம் வரையிலான கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு 'முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி சாலை ' என பெயர் சூட்டப்பட உள்ளதாக முதலமைச்சர் அறிவிப்பு.!

0 1745

சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரையிலான கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு 'முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி சாலை ' என பெயர் சூட்டப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நெடுஞ்சாலைத் துறையின் பவள விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறையை இணைக்க கண்ணாடி இழை நடைமேம்பாலம் உள்ளிட்டவற்றிற்கு அடிக்கல் நாட்டி, பவளவிழா நினைவுத் தூணை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், அடிக்கல் நாட்டப்பட்ட பணிகள் 2 ஆண்டுகளில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றார். ஆயிரத்து 281 தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்பட உள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டிற்குள் தரைப்பாலங்களே இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாகும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments