டெல்லியில் இருந்து வெளிநாடு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

0 1258

ஐரோப்பிய நாடுகளுக்கு 3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி நள்ளிரவில் டெல்லியில் இருந்து ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றார்.

நடப்பாண்டில் முதல் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்குச் செல்கிறார். முதலில் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் பிரதமர் ஓலாப் ஷோல்சை சந்திக்கும் பிரதமர் மோடி, தொடர்ந்து 6-வது இந்தியா- ஜெர்மனி அரசுகளுக்கு இடையிலான இரு தரப்பு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

அங்கிருந்து டென்மார்க் சென்று நார்டிக் நாடுகளுடனான உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். இறுதியாக பாரீஸ் சென்று புதிதாக பதவியேற்றுள்ள அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்திக்கிறார். இதனிடையே 50 தொழிலதிபர்களை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments