தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

0 2036

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. 3,4,5ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments