தமிழகத்தில் வருகிற 3ந்தேதி ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் - தமிழக தலைமை காஜி

தமிழகத்தில் வருகிற 3ந்தேதி ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வருகிற 3ந்தேதி ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார்.
இஸ்லாம் மதத்தின் 5 கடமைகளில் முக்கியமானது ரமலான் நோன்பு இருப்பது ஆகும். ரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயம் முதல் மறைவு வரை இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்வர். இதையடுத்து 30 வது நாளில் ஷவ்வால் பிறை தெரிந்ததும் அடுத்த நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.
ஆனால் இன்று ஷவ்வால் பிறை தெரியாத காரணத்தால் தமிழ்நாட்டில் செவ்வாய்க்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments