நாட்டில் சமையல் எண்ணெய்களின் இருப்பு போதிய அளவில் உள்ளதாக மத்திய அரசு தகவல்.!

இந்தோனேசியாவில் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் சமையல் எண்ணெய்களின் இருப்பு போதிய அளவில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து நுகர்வோர் விவகாரங்கள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து வகை சமையல் எண்ணெய்களின் தற்போதைய கையிருப்பு சுமார் 21 லட்சம் மெட்ரிக் டன் என்றும், மேலும் 12 லட்சம் மெட்ரிக் டன் இம்மாதத்தில் வந்து சேரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உள்நாட்டு சமையல் எண்ணெய் வகைகளின் விலையை குறைப்பது குறித்து முக்கிய சமையல் எண்ணெய் நிறுவனங்களுடன் ஆலோசிக்க உள்ளதாக உணவு மற்றும் பொது விநியோகத்துறை குறிப்பிட்டுள்ளது.
Comments