சென்னையில் மதுபோதையில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் இருவர் கொலை.!

0 3293

சென்னையில் மதுபோதையில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறு இரட்டை கொலையில் முடிந்தது.

திருவான்மியூர் மீனவ குப்பம் பகுதியைச் சேர்ந்த நண்பர்களான அருண், சதீஷ், தினேஷ் ஆகிய மூவரும் வேலையில்லாமல் வெட்டியாக ஊர் சுற்றி வந்துள்ளனர்.

நேற்றிரவு மூன்று பேரும் அதே பகுதியில் நடந்த 16ஆம் நாள் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த நிலையில், நன்றாக குடித்துவிட்டு உணவருந்தியுள்ளனர். அப்போது, விளையாட்டாக பேசிக் கொண்டிருந்த போது அருண் செருப்பைக் கழட்டி தினேஷ் மீது எரிந்ததாக கூறப்படுகிறது.

இதில், தினேஷின் சாப்பாட்டில் மண் விழுந்த நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு உருவாகியுள்ளது.

உடனே அருணுக்கு ஆதரவாக சதீஷும் சேர்ந்து தினேஷை தாக்கியதாக கூறப்படும் நிலையில், ஆத்திரமடைந்த தினேஷ், அங்கிருந்த மீன் வெட்டும் கத்தியை எடுத்து, அருணையும், சதீஷையும் வயிற்றில் குத்தியதாக சொல்லப்படுகிறது.

இருவரும் குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், நண்பர்களை கொலை செய்த தினேஷ் திருவான்மியூர் காவல் நிலையத்தில் சரணடைந்தான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments